தினசரி ஏற்படும் உடல்நல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் வீட்டு மருத்துவம்!

   

வாழ்க்கையில் மட்டுமல்ல நம் உடலிலும் சின்ன, சின்ன பிரச்சனைகள் தினசரி எழுந்துக் கொண்டே தான் இருக்கும். அதில் சில பிரச்சனைகள் வெளியில் தலைக் காட்ட முடியாத வண்ணம் இருக்கும். எடுத்துக்காட்டாக பரு, கரு வளையம், பொடுகு போன்றவை.
சில பிரச்சனைகளோ நம்மை படுத்தி எடுத்துவிடும், வாய்ப்புண், தொண்டை கரகரப்பு, மற்றும் பெண்களின் மாதவிடாய் போன்றவை. இவை எப்போதோ வந்து போகும் சாதாரண எதிரிகள் அல்ல, எப்போதுமே அண்டிக்கொண்டு பாடாய்பட்டுத்தும் மோசமான விரோதிகள்.
காய்ச்சல், சளி கூட ஓரிரு நாட்களில் விட்டொழிந்துவிடும், ஆனால் இவை மாத கணக்கில் ஒண்டிக்கொண்டு கடுப்பேத்தும் மை லார்ட்!!! இதற்கு நீங்கள் எத்தனையோ மருந்துகள் பயன்படுத்தியும் தீர்வுக் கிடைக்கவில்லையா? உங்கள் வீட்டிலேயே இருக்கும் மருந்துகளை பயன்படுத்துங்கள் எளிதாக தீர்வுக் காணலாம்…..
மாதவிடாய் வலி
இரண்டு அல்லது மூன்று எலுமிச்சைப்பழ சாற்றை குளிர்ந்த நீரில் கலந்து தினசரி குடித்து வந்தால் மாதவிடாய் வலி குறையும்.
நாள்பட்ட தலைவலி
காலை வேளையில் அறுத்த ஆப்பிள்களில் கொஞ்சம் உப்பு சேர்த்து சாப்பிட்டு வந்தால் தலைவலி குறையும்
வாய்வு
கால் டீஸ்பூன் பேக்கிங் சோடாவை நீரில் கலந்து குடித்து வந்தால் வாய்வு தொல்லை தீரும்.
தொண்டை கரகரப்பு
நீரில் கொஞ்சம் துளசி இலைகளை போட்டு காய்ச்சி, வடிகட்டி வாய் கொப்பளித்தால் தொண்டை கரகரப்பு சரி ஆகும்.
வாய் புண்
பழுத்த வாழைப்பழத்தை தேனுடன் குழப்பி பேஸ்ட் போன்று செய்து வாய் புண் இடத்தில் தடவினால் சீக்கிரம் வாய்ப்புண் சரி ஆகும்.
ஆஸ்துமா
ஒரு டேபிள்ஸ்பூன் தேனுடன், அரை டேபிள்ஸ்பூன் இலவங்கப் பட்டையை சேர்த்து இரவு தூங்குமுன் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா பிரச்னை தீரும்.
பொடுகு
பொடுகு பிரச்சனைக்கு தீர்வுக் காண, தேங்காய் எண்ணெயில் கொஞ்சம் கற்பூரம் கலந்து, இரவு தூங்குவதற்குக் முன் தலையில் தேய்த்து கொண்டு உறகுங்கள்.
இளநரை
காய்ந்த நெல்லிக்காயை அறுத்து, தேங்காய் எண்ணெயுடன் கலந்து தலையில் நன்கு மசாஜ் செய்வது போல தேய்த்து வந்தால் இளநரை நீங்கும்.
கரு வளையம்
ஆரஞ்சு ஜூஸ் மற்றும் கிளிசரின் சேர்த்து கலந்து, கருவளையம் உள்ள இடத்தில் தடவி வந்தால் கருவளையம் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணலாம்.

(67)

Category: TV Shows

67
Views
About The Author
-